அட கடவுளே… சர்வதேச போட்டிகளில் 4 தங்கம் வென்ற சாம்பியன்… இன்று குடும்பத்தைக் காப்பாற்ற வீதிகளில் காய்கறி விற்கும் அவலம்… அரசு வேலைக்காக ஏங்கும்… தேசிய வீரரின் நெஞ்சை உருக்கும் கதை…!

Spread the love

ஜாார்க்கண்ட் மாநிலம் ராஞ்ச பகுதியில் உள்ள ஒரு சிறிய கடையில், சர்வதேச அளவில் த்ரோபால் போட்டிகளில் இந்தியாவிற்காக நான்கு முறை தங்கப் பதக்கம் வென்ற அமர்தீப் குமார் தற்போது காய்கறி விற்று வருவது சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் நாட்டின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தாலும், பொருளாதார நெருக்கடி மற்றும் முறையான அரசு ஆதரவு இல்லாததால் குடும்பத்தைக் காப்பாற்ற தன் தந்தைக்கு உதவியாக காய்கறி விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

மலேசியா மற்றும் பிற சர்வதேச போட்டிகளில் தேசியக் கொடியைப் பறக்கவிட்டு பதக்கங்களைக் குவித்த இந்தச் சாதனையாளர், தன் வறுமையைப் போக்க பகலில் வாடகை வண்டி ஓட்டுவதாகவும், மீதமுள்ள நேரங்களில் காய்கறி விற்பதாகவும் தெரிவித்துள்ளார். தான் பட்ட கஷ்டங்களுக்கும் போட்டிகளுக்காக வாங்கிய கடன்களை அடைக்கவுமே இந்தத் தொழில்களைச் செய்வதாக அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

பிற மாநிலங்களில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை மற்றும் உதவிகள் கிடைக்கும் நிலையில், ஜார்க்கண்டில் தனது தொடர்ச்சியான முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். விளையாட்டு வீரர்களின் இத்தகைய அவல நிலை, நாட்டின் விளையாட்டுத்துறையில் உள்ள புறக்கணிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு, இணையவாதிகள் மத்தியிலும் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

“வேலைக்கு போன மனைவி வரல”… 5 நாட்கள் மர்மம்… முட்புதரில் நர்ஸ் சடலம்… கொலையாளி யார் தெரியுமா?… வெளிவந்த உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ரஞ்சித்குமாரின் மனைவி உத்திரா, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

5 minutes ago

8 வயது சிறுமி எங்கே?… சிசிடிவியில் சிக்கியதா க்ளூ?… துர்கா பூஜைக்குச் சென்ற தாய்… 3 நாட்களாகத் தொடரும் மர்மம்… தீவிர தேடுதல் வேட்டை…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர், கணவரைப் பிரிந்து தனது பெற்றோர் மற்றும் 8 வயது மகளுடன் காஞ்சிபுரம் மாவட்டம்…

48 minutes ago

ஒரு நொடி கவனக்குறைவு… செல்ஃபி ஆசை… எமனாக வந்த லாரி… 4 உயிர்களைப் பறித்த விபரீதம்… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து…!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள சிவ்புரியைச் சேர்ந்த ஏழு நண்பர்கள், மிர்சாபூரில் உள்ள விந்தியாச்சல் கோயிலுக்குச் சென்று…

56 minutes ago

அடகடவுளே..! மன உளைச்சலா?… “அப்பா படம் பார்க்க கூட்டிட்டு போறாரு”… துள்ளிக்குதித்து காரில் ஏறிய பிஞ்சுகள்… நடுவழியில் நேர்ந்த பயங்கரம்…!!

மத்திய பிரதேச மாநிலம் ராய்சன் மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் தாக்கட் என்பவர் வருவாய்த் துறையில் அரசு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.…

1 மணத்தியாலம் ago

பாதுகாப்பு எங்கே?… 16 வயது சிறுமியின் உயிரைப் பறித்த கொடூரம்… முட்புதரில் கிடந்த சடலம்… பிஞ்சு வயதில் பறிபோன உயிர்…!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 16 வயதுடைய 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், தனது உறவினர் வீட்டிற்குச் சென்ற நிலையில்…

1 மணத்தியாலம் ago

“97 லட்சம் வாக்காளர் நீக்கம்: திமுக தான் முழுப் பொறுப்பு”…. மொத்த ஊழலையும் புட்டு புட்டு வைத்த வைகோ…. அடுத்த பரபரப்பு….!

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசியலில் பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்து தனது…

1 மணத்தியாலம் ago