கடவுளே இத்தனை கொடுமையா…? “அக்காவை தொடர்ந்து தாய், தந்தை பலி…” குடும்பத்தையே இழந்து மூளை கட்டியோடு போராடும் வாலிபரின் சோகம்…!வைரல் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 8, 2026

Spread the love

அடுத்தடுத்து நடந்த சோகங்களால் தனது அக்கா, தந்தை மற்றும் தாய் ஆகிய அனைவரையும் இழந்து அனாதையாக நின்று போராடும் வாலிபர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரையும் உலுக்கியுள்ளது. தற்போது அந்த வாலிபருக்கு மூளைக் கட்டி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு அடிக்கடி காக்காய் வலிப்பு போன்ற வலிப்பு நோயும் ஏற்பட்டு வருகிறது. கையில் மருந்துகளுடன் வீடியோ வெளியிட்ட அந்த வாலிபர், தனக்கு மட்டுமே உலகத்தின் அனைத்துத் துன்பங்களையும் கடவுள் ஏன் கொடுத்தார் என்று கண்ணீருடன் புலம்புகிறார்.

மருத்துவமனைக்குச் சென்றபோது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், “எனக்கு அறுவை சிகிச்சை நடந்தால் அதன்பின் என்னைப் பராமரிக்கவும், மருந்துகள் வாங்கித் தரவும், எனக்கு ஆறுதல் கூறவும் யாருமே இல்லையே” என்று அவர் உருக்கமாகக் கேள்வியெழுப்பியுள்ளார். ஆதரவற்றுத் தனிமையில் நோயுடன் போராடும் இந்த இளைஞரின் வேதனையான நிலைமை இணையத்தில் பார்ப்போரின் மனதை உருக வைப்பதாக அமைந்துள்ளது.