வால்பாறையில் கேரள ஆசிரியர்களுக்கு நேர்ந்த சோகம்…! 13-ல் தொடங்கி 9-ல் நின்ற வேன்.. விபத்து எப்படி நடந்தது…?

By Devi Ramu on சித்திரை 18, 2026

Spread the love

வால்பாறையில் கேரள சுற்றுலாப் பயணிகள் பயணித்த வேன் 13-வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து 800 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்ததில், 7 ஆசிரியர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக உருண்டு விழுந்த வேன் 9-வது வளைவில் நின்றதால் மேலும் சில உயிர்கள் தப்பின. ஒருவேளை அது 8-வது வளைவு வரை சென்றிருந்தால், செங்குத்தான பாறைகள் மற்றும் ஆழமான பள்ளம் காரணமாக உயிரிழப்புகள் இன்னும் அதிகரித்திருக்கும் என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்பது 9-வது வளைவில் எளிதாக இருந்த நிலையில், இன்னும் கீழே சென்றிருந்தால் மீட்புப் பணிகளும் கடும் சவாலாக இருந்திருக்கும்.

மலைப்பாதைகளில் வாகனங்களை ஓட்டும்போது கியரை நியூட்ரலில் போடுவது அல்லது பிரேக்கை மட்டும் நம்புவது போன்ற தவறுகளைத் தவிர்க்க வேண்டும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். எந்த கியரில் மேலே ஏறினோமோ அதே கியரில் கீழே இறங்குவதே பாதுகாப்பானது, இதனால் இன்ஜின் தானாகவே வேகத்தைக் கட்டுப்படுத்தும். வளைவுகளில் திரும்பும்போது ஹாரன் அடிப்பது மற்றும் மேலே வரும் வாகனங்களுக்கு வழிவிடுவது போன்ற பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றினால் இதுபோன்ற கோர விபத்துகளைத் தவிர்க்க முடியும்.