அட கொடுமையே… காது சிகிச்சைக்குப் போய் கையை இழந்த சோகம்… தவறான ஊசியால் வாழ்க்கை… பறிபோன 20 வயது பெண்… மருத்துவமனையின் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஆவணி 6, 2026

Spread the love

பிஹாரின் சிவஹர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான ரேகா, காது வலி காரணமாக பாட்னாவில் உள்ள மகாவீர் ஆரோக்கிய சன்ஸ்தான் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், மருத்துவமனையின் அலட்சியப் போக்கினால் அவருக்குத் தவறான ஊசி செலுத்தப்பட்டது.

ஊசி செலுத்தப்பட்ட பிறகு ரேகாவின் கை பச்சை நிறமாக மாறத் தொடங்கி, கடுமையான வலியும் ஏற்பட்டது. தொடக்கத்தில் மருத்துவர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் நிலமை மோசமடையவே, அவரது குடும்பத்தினர் பல மருத்துவமனைகளுக்கு அலைந்து திரிந்து, இறுதியாக மேதாந்தா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக முழங்கைக்கு மேல் கையை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

   

https://twitter.com/MandeepRajBhar9/status/2085005246263378248/video/2

   

மருத்துவர்களின் இந்தக் கொடூர அலட்சியத்தால் ரேகாவின் கையை இழந்ததோடு, நிச்சயிக்கப்பட்டிருந்த அவரது திருமணமும் நின்றுபோனது. இவ்வளவு பெரிய பாதிப்பு நிகழ்ந்த போதிலும், இதுகுறித்து காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்று ரேகா வேதனையுடன் தெரிவிக்கிறார்.