விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற திருச்சுழி தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், வேட்பாளர் ராஜவர்மன் கலந்துகொண்டு பேசினார். தான் திருச்சுழி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நேரடி உத்தரவின் பெயரிலேயே இங்கு போட்டியிடுவதாகவும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார். தான் ஏற்கனவே சாத்தூர் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த அனுபவம் கொண்டவன் என்பதால், தேர்தல் பணிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தனக்கு நன்கு தெரியும் என்றும் நிர்வாகிகளிடையே அவர் பேசினார்.
திருச்சுழி தொகுதியில் உள்ள 292 கிளைக் கழக நிர்வாகிகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்த ராஜவர்மன், நிர்வாகிகள் தேர்தல் வேலைகளில் தொய்வின்றிச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். பணிகளில் ஏதேனும் சுணக்கம் ஏற்பட்டால் கடுமையான முடிவுகளை எடுக்கத் தயங்கமாட்டேன் என எச்சரித்த அவர், தமிழக வெற்றிக் கழக வேட்பாளருக்குப் போடப்படும் வாக்குகள் செல்லாத வாக்குகளுக்குச் சமம் என்றும், தனக்கு வாக்களித்தால் தொகுதி மக்களுக்காகப் பாடுபடுவேன் என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக, சாத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட ராஜவர்மன் ஆர்வம் காட்டினார். ஆனால் அத்தொகுதி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அவர், சசிகலா அணியில் இணையப் போவதாகத் தகவல் பரவியது. இதனால் நயினார் நாகேந்திரனின் வெற்றி பாதிக்கப்படும் என அஞ்சிய அதிமுக மற்றும் பாஜக தலைமை, ராஜவர்மனைச் சமரசம் செய்து எடப்பாடி பழனிசாமி மூலம் திருச்சுழி தொகுதிக்கு மாற்றியது தற்போது உறுதியாகியுள்ளது. இந்த ‘அண்டர்கிரவுண்ட் டீலிங்’ குறித்து ராஜவர்மனே பகிரங்கமாகப் பேசியது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…