“பல கோடி மதிப்பு….! சந்தேகமே வர கூடாது…” 8 மணி நேரம் கடைக்குள் பதுங்கிய முகமூடி கொள்ளையன்…. முன்னாள் ஊழியர் தான் காரணமா…? ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

By Devi Ramu on புரட்டாதி 16, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள கோசி கலான் பகுதியில் இயங்கி வரும் பிரபல நகைக்கடை ஒன்றில், சினிமா படங்களை மிஞ்சும் வகையில் பிரம்மாண்டக் கொள்ளை சம்பவம் ஒன்று அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவன், நள்ளிரவில் நகைக்கடையின் கூரையை சாமர்த்தியமாக உடைத்து உள்ளே புகுந்துள்ளான். யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராத வகையில், சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாகக் கடைக்குள்ளேயே தங்கி இருந்து, அங்கிருந்த ரூ.14 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ.14 லட்சம் ரொக்கப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு கூரை வழியேய தப்பியோடியுள்ளான்.

காலை கடை உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது கடை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு உறைந்துபோயினர். போலிஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கடையின் ரகசியங்கள் அனைத்தும் தெரிந்த முன்னாள் ஊழியர் ஒருவரே இதற்குப் பின்னணியில் உளவு பார்த்திருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலிஸார், தப்பியோடிய முகமூடிக் கொள்ளையனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.