சென்னை குன்றத்தூர் காந்தி சாலை மணிகண்டன் நகரில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி அபிதா(60) ராஜேந்திரனின் தாய் வள்ளியம்மாள்(88). இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். ராஜேந்திரன் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 31ஆம் தேதி அன்று பணியின் காரணமாக திருமண மண்டபத்திலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் மாமியாரும், மருமகளும் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்கள். அப்போது இரவு பத்து முப்பது மணி அளவில் வீட்டிற்குள் வந்த மர்மநபர் ஒருவர் அபிதாவை முகத்தில் ஓங்கி குத்தி உள்ளார். இதில் அவர் சம்பளத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். பிறகு மாமியாரை தாக்கி அவருடைய கைகளை கட்டிப்போட்டு அவர் கழுத்தில் அணிந்து இருந்த ஏழு சவரன் தங்கச் செயின் மற்றும் நான்கு சவரன் மதிப்புடைய தங்க வளையல்கள் என மொத்தம் 11 சதன் தகவல்களை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வள்ளியம்மாளை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். இதனை அடுத்து சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தார்கள். அப்போதுதான் மாமியாரின் உடலில் மட்டும் காயங்கள் இருந்ததையும், அபிதாவின் உடலில் எந்தவித காயங்கள் இல்லாமல் இருப்பதையும் கண்டு போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அப்போது அபிதாவிடம் விசாரித்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்துள்ளார். அவரை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது அபிதாவிற்கு திருமணம் ஆகி குழந்தை இல்லாததால் அருகில் உள்ள கோயிலுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது கோயிலில் 35 வயது நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் அவர் அபிதாவிடம் பணம் கேட்க ஆரம்பித்துள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை எல்லாமே தன்னுடைய மாமியார் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறியிருக்கிறார். அந்த நகையை மாமியாருக்கு சந்தேகம் வராமல் எடுத்தால் இரண்டு பேரும் நகை பங்கு போட்டுக் கொள்ளலாம் என்றும் அபிதா ஐடியா கொடுத்துள்ளார்.
இதற்கு முன்பும் இதே போல ஒரு முறை கள்ளக்காதலன் வந்து நகையை திருடி சென்றுள்ள சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஆனால் போலீசில் புகார் கொடுக்காமல் கள்ளக்காதலனை அபிதா காப்பாற்றியுள்ளார். இந்த நிலையில் தான் சம்பவத்தன்று ராஜேந்திரன் திருமண மண்டபத்தில் தங்கி விட்டதால் வீட்டிற்குள் நுழைந்த கள்ளக்காதலன் வள்ளியமாளை தாக்கிவிட்டு அபிதாவை மட்டும் தாக்குவது போல் நடித்துள்ளார். அதன் பிறகு நகையை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…