தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து மக்களும் பயன்பெறும் வழியில் ஒவ்வொரு மாதமும் அனைத்து வட்டாரத்திலும் முகாம் நடைபெறவுள்ளதாம். அதன் அடிப்படையில் வருகின்ற செப்டம்பர் 13ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை குறைதீரும் முகாம் சென்னையில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. குடும்ப அட்டையில் பெயர் சேர்ப்பது, பெயரை நீக்குவது, முகவரி போன்ற மாற்றங்களை செய்து கொள்ளலாம். முதியோர்களுக்கு அங்கீகாரம் சான்றிதழ் வழங்கப்படும்.
ரேஷன் கடையில் பொருட்களை பற்றி ஏதேனும் குறைகள் இருந்தாலும் புகார் அளிக்கலாம். புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 70 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுக்கே சென்ற வினியோக திட்ட பொருட்களை செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 16 வரை கொடுக்க உள்ளார்களாம். மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க நகர், அம்பத்தூர், அண்ணா நகர் மற்றும் ஆலந்தூர் ஆகிய மண்டலங்களில் செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 15 வரை ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய உள்ளார்கள் என அறிவிப்பு வந்துள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…
தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மீதான போக்சோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் விளக்கத்தைக் சுட்டிக்காட்டி அமைச்சர் சி.டி.ஆர்.…
பீகார் மாநிலம் ஜமுய்-லக்கிசராய் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில், தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவன்…
இந்தியாவின் முன்னணி கிரானைட் ஏற்றுமதி நிறுவனமான ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனர் ஆர். வீரமணி (84) மீது சுமத்தப்பட்டுள்ள போக்சோ வழக்கு…