சென்னை மக்களே.. உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?.. அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!

By Divyamayakannan on புரட்டாதி 11, 2025

Spread the love

தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து மக்களும் பயன்பெறும் வழியில் ஒவ்வொரு மாதமும் அனைத்து வட்டாரத்திலும் முகாம் நடைபெறவுள்ளதாம். அதன் அடிப்படையில் வருகின்ற செப்டம்பர் 13ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை குறைதீரும் முகாம் சென்னையில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. குடும்ப அட்டையில் பெயர் சேர்ப்பது, பெயரை நீக்குவது, முகவரி போன்ற மாற்றங்களை செய்து கொள்ளலாம். முதியோர்களுக்கு அங்கீகாரம் சான்றிதழ் வழங்கப்படும்.

ரேஷன் கடையில்  பொருட்களை பற்றி ஏதேனும் குறைகள் இருந்தாலும் புகார் அளிக்கலாம். புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 70 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுக்கே சென்ற வினியோக திட்ட பொருட்களை செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 16 வரை கொடுக்க உள்ளார்களாம். மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க நகர், அம்பத்தூர், அண்ணா நகர் மற்றும் ஆலந்தூர் ஆகிய மண்டலங்களில் செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 15 வரை ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய உள்ளார்கள் என அறிவிப்பு வந்துள்ளது.