கல்லூரி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘உலகம் உங்கள் கையில்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. நவீன காலத்திற்கு ஏற்ப மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள இத்திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
