பீகார் மாநிலத்தில் நீட் தேர்வுக்காகப் படித்து வந்த மாணவி ஒருவர், காய்ச்சலால் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறையினர் கூறிய நிலையில், அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனையில் அம்பலமாகியுள்ளது. பாட்னாவில் உள்ள விடுதி ஒன்றில் தங்கிப் படித்து வந்த அந்த மாணவி, கடந்த 9-ஆம் தேதி மயக்க நிலையில் மீட்கப்பட்டுச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலில் நகக்கீறல்கள், ஆழமான காயங்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் ஏற்பட்ட ரத்தப்போக்கு ஆகியவை உயிர் பிரியும் வரை சித்திரவதை அனுபவித்ததை உறுதிப்படுத்துவதாக மருத்துவர்கள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், தற்போது விடுதி உரிமையாளர் மனிஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி உயிரிழந்தபோது முறையான விசாரணை நடத்தாமல் வழக்கை மறைக்க முயன்ற காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்துப் போராட்டங்கள் வெடித்துள்ளதால், உண்மையை கண்டறிய உயர்மட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து பீகார் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…