பள்ளியில் பயங்கரம்.! “ஏன் லேட்டா வந்தன்னு” கேட்ட ஆசிரியைக்கு ‘பளார்’ விட்ட மாணவன்… சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!!

By Soundarya on மாசி 7, 2026

Spread the love
குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் (Panchmahal) மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், தேர்வு நேரத்தில் தாமதமாக வந்த மாணவன் ஒருவன் தன்னைத் தட்டிக்கேட்ட பெண் ஆசிரியையை வகுப்பறையிலேயே கொடூரமாகத் தாக்கியுள்ளார். “ஏன் தாமதமாக வந்தாய்?” என்று ஆசிரியை கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், சக மாணவர்கள் முன்னிலையிலேயே ஆசிரியையின் கன்னத்தில் அறைந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

<

/div>

இந்தக் கொடூரமான தாக்குதல் சம்பவம் வகுப்பறையில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் விரைந்து வந்த குஜராத் போலீசார், ஆசிரியையைத் தாக்கிய மாணவனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக் கூடத்திலேயே மாணவர் ஒருவர் ரவுடித்தனமாக நடந்துகொண்ட இந்தச் சம்பவம் கல்விச் சூழலில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.