தமிழகச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய் நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் போன்ற அதிரடி வாக்குறுதிகளை அறிவிக்குமாறு அதிமுக தலைமைக்கு பாஜக மேலிடம் ஆலோசனை வழங்கியுள்ளது. திமுக அரசு தனது வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி மக்களிடையே நிலவுவதால், அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான நிதி ஆதாரங்களுக்குக் கவலைப்பட வேண்டாம் என்றும், மத்திய அரசின் முழு ஒத்துழைப்புடன் இவற்றை நிறைவேற்றப் பிரதமர் மோடி ‘கேரண்டி’ அளிப்பார் என்றும் பாஜக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பாஜக அதிக நிதி வழங்கி வெற்றி பெற்றதை முன்னுதாரணமாகக் கொண்டு, தமிழகத்திலும் அதே பாணியைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொகுப்பூதியப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முன்மொழிவதன் மூலம் வாக்காளர்களை ஈர்க்க முடியும் என பாஜக நம்புகிறது. அதிமுகவின் வாக்குறுதிகளுக்குப் பின்னால் மத்திய அரசு துணை நிற்கும் என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைப்பதன் மூலம், வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியும் என்பதே இந்த ஆலோசனையின் முக்கிய நோக்கமாகும்.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…
கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…
நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த…
டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…
சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…