சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்…! அனுராக் காஷ்யப்பின் ‘அன்கில் 123’ படத்தின் கதை இதுதானா…? லீக்கான தகவல்…!!

By Devi Ramu on கார்த்திகை 13, 2025

Spread the love

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அன்கில் 123’. சமூக ஊடகங்களில் பிரபலம் ஆவதற்கான ஆசை ஒரு தனிநபரின் மனநிலையையும், வாழ்வையும் எந்த விதத்தில் சிதைக்கிறது என்பதை ஆழமாகப் பேசும் ஒரு மனோதத்துவ திகில் கதையாக இது உருவாகி வருகிறது. இந்தப் படத்தை சாம் ஆண்டன் எழுதி இயக்குகிறார். சவரிமுத்து அவர்களும் இவருடன் இணைந்து திரைக்கதை பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

பிரதான கதாபாத்திரத்தில் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். புகழ் பெறுவதற்கான கனவில் தொடங்கும் ஒரு சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரின் வாழ்க்கை எவ்வாறு மனநிலை மாற்றத்திற்கும், ஒட்டுமொத்த அழிவுக்கும் காரணமாகிறது என்பதை இப்படம் விரிவாகக் கூறுகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் பதிவுகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் தனிமை, அழுத்தங்கள், சுய அடையாளம் இழப்பு, பொறாமை மற்றும் தன்னம்பிக்கை குறைபாடு ஆகியவற்றின் மோதல்களைத் தெளிவாகக் காட்சிப்படுத்த இந்தத் திரைப்படம் முயற்சிக்கிறது.