மகளிர் உரிமைத்தொகை… திமுகவினருக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..!!

By Soundarya on கார்த்திகை 13, 2025

Spread the love

உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்த லட்சக்கணக்கான குடும்ப தலைவிகள் எப்போது தொகை வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில், எத்தனை குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.  இந்நிலையில் போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் ‘உடன்பிறப்பே வா’ என்ற   ஆலோசனையை முதல்வர் ஸ்டாலின் இன்று மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், விடுபட்டவர்களில், தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை பெற்றுத் தர திமுகவினர் உதவ வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு திமுகவினர் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.