தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இது நாளை தாழ்வு மண்டலமாகவும், 27 ஆம் தேதி புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
ஏற்கெனவே பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், புயல் சின்னத்தால் மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அக். 28 ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
