ஐயோ… “யார் அந்த எட்டப்பர்கள்?”…. முதல்வர் விஜய் கூட்டத்தைப் புறக்கணித்து… கனிமொழி எம்பி கிளப்பிய புயல்… அரசியலில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 8, 2026

Spread the love

சென்னையில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதங்கள் முக்கியத்துவம் பெற்று வரும் சூழலில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்பிக்கள் யாரும் பங்கேற்காமல் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்பி கனிமொழி, முதல்வர் விஜய் கூட்டிய இக்கூட்டத்திற்கான நோக்கம் மற்றும் காரணம் என்னவென்பதில் எவ்வித தெளிவும் இல்லை என்று விமர்சித்தார். மேலும், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதியாக அமல்படுத்துவதுடன், அனைத்து மாநிலங்களுக்கும் நீதியான முறையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதே திமுகவின் முதன்மையான கோரிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.

   

தொடர்ந்து பேசிய அவர், தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்களை ‘எட்டப்பர்கள்’ என்று காங்கிரஸ் கட்சி முன்பே விமர்சித்திருந்ததைச் சுட்டிக்காட்டினார். தற்போது தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், உண்மையான எட்டப்பர்கள் யார் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்துவிட்டது என்று கனிமொழி காட்டமாகத் தெரிவித்தார்.