அட கடவுளே… இந்துன்னு நம்ப வச்சு ஏமாத்தினான்… 13 வருஷம் சித்ரவதை… மிரள வைக்கும் இந்தூர் பெண்ணின் வாக்குமூலம்… இணையத்தில் வைரல்…!

By Swetha on ஐப்பசி 12, 2026

Spread the love

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த 31 வயது இந்துப் பெண் ஒருவர், சமூக வலைதளம் மூலம் பழகி தன்னை ஏமாற்றி பல ஆண்டுகளாக சித்திரவதை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். உத்தர் பிரதேசத்தைச் சேர்ந்த அந்த நபர், தன்னை இந்து என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேஸ்புக்கில் நட்பு பாராட்டியுள்ளார். பின்னர் அவரை உத்தரப் பிரதேசத்திற்கு வரவழைத்து, ஒரு அறையில் சிறைபிடித்து கொடூரமான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கியுள்ளார்.

கடந்த 13 ஆண்டுகளாக தான் கடுமையான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் உடல்ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளானதாக அந்தப் பெண் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தொழுகை நடத்த மறுத்த போதெல்லாம் ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாகத் தாக்கப்பட்டுள்ளார். மேலும், தனது விருப்பத்திற்கு மாறாக ஐந்து முறை கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும், இரண்டு முறை ஹலாலா சடங்கிற்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

   

இந்தத் துயரச் சம்பவத்திலிருந்து தப்பிய அந்தப் பெண், தற்போது காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் காவல்துறையினர், குற்றவாளி மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.