வடக்கு மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் மனித அறிவுக்கு எட்டாத ஒரு வினோதமான மற்றும் திகைப்பூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மயங்கிச் சரிந்துள்ளார். அப்போது அவரது மூச்சுத் திணறல் நின்றதைக் கண்ட குடும்பத்தினரும் உறவினர்களும், அந்தச் சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டதாகத் தவறாக நினைத்து மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடலைப் பெட்டியில் வைத்து இறுதிச் சடங்குகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாகச் செய்துள்ளனர். சிறுமியின் உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு சுமார் 8 மணி நேரம் கடந்த நிலையில், திடீரெனச் சவப்பெட்டிக்குள் அசைவுகள் ஏற்பட்டுள்ளது.
https://www.instagram.com/reel/DeYqlOAjfXY/?utm_source=ig_web_copy_link&exln=NTc4MTIwNjQ2YQ==
அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடையும் வகையில், இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட அந்தச் சிறுமி எந்தவிதப் பாதிப்பும் இன்றி திடீரென எழுந்து அமர்ந்து குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார். இறந்ததாகக் கருதப்பட்டு இறுதிச் சடங்குக்குத் தயாரான நிலையில், 8 மணி நேரம் கழித்து உயிருடன் எழுந்து வந்த இந்த வினோதமான சம்பவம் தொடர்பான தகவல்கள் மற்றும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டுச் செம வைரலாகி வருகிறது.
