ரியா ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவருடைய கணவரும் ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருந்தார். இவர்களது மகன் யாஷ், ரியாவின் வகுப்பிலேயே படித்து வந்தான். ஒருநாள் ரியா தனது வகுப்பிலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் “எனது ஆசை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதும்படி திடீர் தேர்வு ஒன்று வைத்தார். மாணவர்கள் அனைவரும் தங்கள் விடைத்தாள்களில் எழுதிச் சமர்ப்பிக்க, ரியா அவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று இரவில் திருத்தத் தொடங்கினார்.
வீட்டில் அனைவரும் இருந்தபோதிலும் ஒருவித தனிமையே நிலவியது. ரியாவின் கணவர் தனது கைபேசியில் சமூக வலைத்தளங்களைப் பார்ப்பதில் மூழ்கியிருந்தார். மகன் யாஷ் தன் அறையில் படித்துக்கொண்டிருக்க, தாத்தாவும் பாட்டியும் கூடத் தங்கள் அறைகளில் தங்களது கைபேசிகளிலேயே மூழ்கியிருந்தனர். ரியா ஒவ்வொரு தாாளாகத் திருத்திக் கொண்டு வரும்போது, ஒரு குழந்தையின் கட்டுரையைப் படித்தவுடன் அவருடைய கண்கள் கலங்கி, கண்ணீர் சொட்டுச் சொட்டாகக் கொட்டத் தொடங்கியது. அவரது அழுகைச் சத்தம் கேட்டு, பதறிப்போன கணவர் ஓடிவந்து என்னவென்று விசாரித்தார்.
ரியா தன் கணவரிடம், “வகுப்பில் நான் கொடுத்த மிக எளிய தலைப்பிற்கு ஒரு குழந்தை எழுதியுள்ள பதில் என் நெஞ்சை உலுக்கிவிட்டது” என்று கூறி அழுதார். அந்த குழந்தை கட்டுரையில், “நான் ஒரு கைபேசியாக மாற விரும்புகிறேன். ஏனெனில் என் பெற்றோர், தாத்தா, பாட்டி அனைவரும் எப்போதும் கைபேசியையே கவனித்துக் கொஞ்சுகிறார்கள்; ஆனால் என்னோடு யாரும் பேசுவதில்லை. நான் கைபேசியாக மாறினால் மட்டுமே அவர்களின் அன்பும் கவனமும் எனக்குக் கிடைக்கும்” என்று எழுதியிருந்தது. இதைக் கேட்டு அதிர்ந்த கணவர், “யார் அந்த குழந்தை?” என்று கேட்க, ரியா கண்ணீருடன் அது வேறு யாருமல்ல, தங்களின் சொந்த மகன் யாஷ் தான் எழுதிய விடைத்தாள் என்று சுட்டிக்காட்டினார்.
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள 'வனாந்தரா' ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி, கடந்த 2022-ஆம்…
நேபாளத்தில் உள்ள சேதி ஆற்றில் ஒரு நாயைப் பாலம் வழியே உயிருடன் தூக்கி வீசும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கான்சிராம் கூட்டு மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு மையத்தில் நெஞ்சை பதறவைக்கும் அவல…
தெலுங்கானா மாநிலம் அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டுபல்லி பால்னாரி (68). இவர் நேற்று இரவு தனது…
கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் மருத்துவர் போல நடித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மருந்து…
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சகலேஷ்பூர் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் 23 வயதான வர்ஷா என்ற பெண் தனது…