தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு நிகரான அளவில் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகர்கள் வெகு சிலர்தான். அவர்களின் ஒருவர் டெல்லி கணேஷ். இவர் தவிர்க்க முடியாத நடிகர். வில்லன், காமெடியன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அற்புதமாக நடிக்க கூடியவர். இவர் பாலச்சந்திரன் பட்டறையிலிருந்து வந்தவர் .ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என அனைத்து நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரோடும் அசத்தலாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர்.
இவர் 1979 ஆம் வருடம் துறை இயக்கத்தில் வெளியான பசி என்ற படத்தில் முனியாண்டி என்ற ரிக்ஷா டிரைவராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் .அதற்காக அவருக்கு மாநில அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்தது. சமீபத்தில் கூட ஒருசில படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் இவர் நேற்று இரவு திடீரென்று காலமானார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிய்வித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டெல்லி கணேஷ் மகன், அப்பாவுக்கு எண்பது வயதாகிடுச்சி. இப்போ தான் சமீபத்தில் அப்பாவுக்கு 80ஆம் கல்யாணம் பண்ணினோம்.

#image_title
நைட் மாத்திரை போடலாம்னு எழுப்பியபோது அசைவு இல்லாமல் இருந்தார். டாக்டர் வந்து பார்த்து இறந்துவிட்டதாக சொன்னார். இது திடீர்னு நடந்த சம்பவம். ஜாக்கிரதையா பாத்துக்கோங்கன்னு டாக்டர் சொல்ற அளவுக்கு எதுவும் நடக்கல. இது எங்களுக்கு பெரிய இழப்பு என்று கூறியுள்ளார்.
