பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய பெண் போட்டியாளர்.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!

By Nanthini on கார்த்திகை 10, 2024

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் 8வது  சீசன் ஆரம்பமாகிவிட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கு நடுவில் கோடு போடப்பட்டுள்ளது.     எனவே தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர். தற்போது தான் போட்டி சூடுபிடித்துள்ளது. ஒருவரையொருவர் தாக்கி பேசியும், சண்டையிட்டும் வருகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்.. யார் தெரியுமா

   

இதனால் வார கடைசியில் VJS போட்டியாளர்களை தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறார். பிக்பாஸில் இருந்து அர்னவ், ரவீந்தர், தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டார்கள்.    போன வாரம்  நாமினேஷன் லிஸ்டில் அன்ஷிதா, அருண் பிரசாத், தர்ஷா, ஜாக்குலின், முத்து, பவித்ரா ஜனனி, சத்யா மற்றும் சவுந்தர்யா ஆகியோர் இருந் நிலையில் தர்ஷா குப்தா வெளியேறினார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியை சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் ரசிகர்களிடம் எதிர்பார்க்காத ரெஸ்பான்ஸ் இல்லாத காரணத்தால் இந்த வாரம் 5 புதிய வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளர்களை விஜய் டிவி களமிறக்கியுள்ளது. இது ஒரு புறம் இருக்கையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு 19 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

   

சுனிதா அப்படியே போயிடுங்க" பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம் | biggboss tamil sunitha evicted from the house | HerZindagi Tamil

 

போட்டியாளர்கள் அதிகமாக இருப்பதால் வீடு நிரம்பியுள்ளது. இதனால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்  இருக்கலாம் என்று கூறப்பட்டது. அந்தவகையில் எலிமினேஷனில் இதனை தொடர்ந்து இந்த வாரம், அன்ஷிதா, சாச்சனா, ஜாக்குலின், சுனிதா, அருண், விஷால், ஆனந்தி, ரஞ்சித், முத்துகுமரன், தீபக், பவித்ரா ஆகியோர் இருக்கிறார்கள். இதில், ஆனந்தியும், சுனிதாவும் குறைவான வாக்குகள் பெற்று கடைசியில் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளது விஜய் டிவியில் கொஞ்சும் தமிழ் பேசும் பிரபலமாக வலம் வந்த சுனிதா தான் வெளியேறியுள்ளாராம்.  இது ரசிகர்களை சற்று அதிர்ச்சியடைய வைத்துள்ளது.