“பெற்றோர் IAS அதிகாரிகள்னா பிள்ளைகளுக்கு எதுக்கு இடஒதுக்கீடு?.. உச்ச நீதிமன்றம் கேட்ட ஒற்றைக் கேள்வி”…!!!

Spread the love

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாக முன்னேறிய ‘கிரீமி லேயர்’ (Creamy Layer) பிரிவினருக்கு இடஒதுக்கீடு சலுகையை நீட்டிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது. இதுதொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு, இடஒதுக்கீடு மூலம் ஏற்கனவே கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர்மட்டத்தை எட்டிய குடும்பங்களுக்கு ஏன் இன்னும் அந்த சலுகை தொடர வேண்டும் என்று வினவியுள்ளது. ஒரு தலைமுறை இந்த சலுகையைப் பயன்படுத்தி சமூகத்தில் முன்னேறிய பிறகு, அடுத்த தலைமுறையின் தகுதிகள் மற்றும் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து கண்டிப்பாக மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

வழக்கின் உதாரணங்களைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பெற்றோர் இருவரும் ஐஏஎஸ் (IAS) அதிகாரிகள் போன்ற உயர்பதவிகளில் இருந்து நல்ல வருமானம் ஈட்டும் பட்சத்தில், அவர்களது பிள்ளைகளுக்கு மீண்டும் இடஒதுக்கீடு கோருவது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பினர். கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக ஒரு குடும்பத்திற்கு அதிகாரம் கிடைக்கும்போது, சமூகத்தில் அவர்களின் அந்தஸ்து தானாகவே உயர்ந்துவிடுகிறது என்றும், இந்த மாற்றத்திற்குப் பிறகும் அடுத்தடுத்த தலைமுறையினர் இடஒதுக்கீட்டைத் தொடர நினைத்தால், இந்த அமைப்பிலிருந்து நாம் ஒருபோதும் வெளியே வர முடியாது என்றும் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

அதேநேரம், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு (EWS) என்பது முற்றிலும் பொருளாதார நிலையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும், அதில் சமூக ரீதியாக பின்தங்கிய நிலை என்ற கோணம் கிடையாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். சமூக மாற்றத்தை அடைந்த பிறகும் சலுகைகளைத் தொடர்வது குறித்த இந்த விவாதத்தில், உரிய விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்துள்ளது.

Muthu Mani

Recent Posts

டி.கே.சிவக்குமாருக்கு பயமா..? மேகதாது அணைக்கு எதிராக.. முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்..? கே.என்.நேரு காட்டம்..!

கர்நாடக மாநிலத்தின் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகத்தின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும் திமுக மூத்த…

15 minutes ago

3,000 கி.மீ தூரம்… சீனாவில் இருந்து ஹைதராபாத்தில் ஆபரேஷன்..! இந்தியாவின் முதல் 5G ரோபோடிக் செய்த பிரம்மாண்ட மருத்துவம்.. வியக்க வைக்கும் சாதனை…!

சீனாவின் வூகான் நகரில் இருந்தபடி, இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள நோயாளி ஒருவருக்கு 5ஜி தொழில்நுட்பம் மற்றும் ரோபோடிக்ஸ் உதவியுடன் வெற்றிகரமாக…

17 minutes ago

டிரம்ப் போட்ட ஒற்றை ட்வீட்… ஈரானுடன் போர் நிறுத்தம்..? டெல்லியில் இருந்து உலகிற்கு.. இன்னும் சில மணி நேரத்தில் சொன்ன அமெரிக்கா நல்ல செய்தி…!!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன்…

34 minutes ago

மனைவி மறைவுக்குப் பிறகு… உருக்கமான வீடியோ வெளியிட்ட நடிகர் முத்துக்காளை… கலங்கிப்போன ரசிகர்கள்…!

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு சமீபத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…

36 minutes ago

பெற்ற மகளின் கண்முன்னே கள்ளக்காதலனுடன் தனிமை!.. மகளுக்கு வலைவீசிய ‘சைக்கோ’ மாமா.. நெஞ்சை உலுக்கும் சிறுமியின் வாக்குமூலம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துராமன் என்பவரின் மனைவி மீனா (42). இந்த…

37 minutes ago

“வெறும் 20 அடிதானே” 7 வயது சிறுவனை அடித்து கை, அந்தரங்க உறுப்பை உடைத்த கொடூர முதல்வர்… பெற்றோர்களிடம் சொன்ன அலட்சிய பதில்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தில் உள்ள சேன்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முர்கிதோலர் கிராமத்தில் இயங்கி வரும் 'டாக்டர் பீம்…

52 minutes ago