அண்ணனின் காதலுக்காக நியாயம் கேட்ட தம்பி, கொதிக்கும் எண்ணெயை 8 வகுப்பு சிறுவன் மீது ஊற்றிய கடைக்காரர் – இணையத்தில் வைரலான வீடியோ!

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவனுக்கும், அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தொடர்ந்து நெருங்கிப் பழகிய நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியது. இந்நிலையில் அந்த சிறுமியை சிறுவன் யாருக்கும் தெரியாமல் தனது நண்பன் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மகளை காணவில்லை என்று பதட்டம் அடைந்த பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுவனிடம் இருந்த சிறுமியை மீட்டனர். மேலும் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சிறுவன். மீண்டும் தனது காதலி சிறுமியுடன் பேசியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்தால் சிறுமியின் உறவினர் செல்லத்துரை உள்ளிட்ட 2 பேர் அந்த சிறுவனிடம், இனிமேல் எங்க பொண்ணு கிட்ட பேசற வேலை வேண்டாம் என்று மிரட்டி தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து அறிந்த சிறுவனின் தம்பி, ஓசூர் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவன், செல்லதுரை நடத்திவரும் சாலையோர ஸ்வீட் கடைக்கு சென்று தனது அண்ணனை எப்படி அடிக்கலாம் என செல்லத்துரையிடம் கேள்வி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த செல்லதுரை, அவரது கடையில் ஸ்வீட் போட வைத்திருந்த கொதிக்கும் எண்ணெயை எடுத்து மாணவன் மீது ஊற்றினார். இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள், மாணவனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் செல்லதுரை உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Elango

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

5 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

5 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

5 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

5 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

6 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago