காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரையில் கடந்த பல வருடங்களாகவே திமுக கூட்டணியில் தான் அங்கம் வகித்து வருகிறது. கலைஞர் முதல்வராக இருந்தபோது சோனியா காந்தியுடன் திமுகவிற்கு நல்ல இணக்கமான உறவு இருந்தது. தற்போது ஸ்டாலின் முதல்வராக இருக்கும் நிலையில் ராகுல் காந்தியும் அந்த இணக்கத்தை பின்பற்றி வருகிறார். மத்தியில் கடந்த மூன்று முறை காங்கிரஸ் தோல்வியை சந்தித்தாலும் தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி என்பதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் 2021 தேர்தலில் திமுக கொடுத்த குறைவான தொகுதிகளை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் 2026 தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்கும் முடிவில் உள்ளது. ஆனால் திமுக 25 தொகுதிகளுக்கு மேல் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. திமுகவுடன் எத்தனை தொகுதிகள் என்று பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் தலைவர் உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை நியமித்திருந்தது. சில நாட்களுக்கு முன்பு கூட அந்த ஐந்து பேரும் அறிவாலயம் சென்று முதல்வரை சந்தித்து பேசினர்.
தேர்தல் நெருங்கும் இடையில் விரைவில் இது குறித்து முழுமையாக பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. இப்படியான நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ஸ்டாலினிடம் கறாராக பேசிய அதிக சீட்டுகளை வாங்குவார் என்ற நம்பிக்கை காங்கிரஸ் தலைமைக்கு இல்லை என தெரிகிறது. அவரின் அப்ரோச் மிகவும் சாஃப்ட்டாக இருப்பதால் அவரை தூக்கிவிட்டு தலைவர் பதவியில் வேறு யாரையாவது நியமிக்கலாமா என்று காங்கிரஸ் தலைமை யோசித்து வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…