திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கிய சிம்ரனுக்கு மோனல், ஜோதி ஆனந்த் என்ற இரு தங்கைகளும், சுமீத் நவல் என்ற ஒரு சகோதரனும் உள்ளனர். இதில் சிம்ரனின் தங்கையான நடிகை மோனல், நடிகர் குணால் நடிப்பில் வெளியான ‘பேசாத கண்ணும் பேசுமே’ என்ற திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் இறப்பதற்கு முன்னர், “இப்போது நீ என்னோடு இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாம் எப்போதும் ஒன்றாக இருக்கிறோம் என்பது எனக்கு தெரியும். 20 வருடங்கள் ஆனாலும் நீ என்னுள் ஒரு அங்கமாக இருந்து வருகிறாய்” என்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். மேலும், தான் இறப்பதற்கு முன்பாக “உண்மையான ஆம்பளையை நான் சந்திக்கவே இல்லை” என்று ஒரு கடிதத்தையும் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற சிம்ரன், ஒரு சிறந்த நடிகை மட்டுமல்லாமல் பரதநாட்டியக் கலைஞர், மாடல் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டவர் ஆவார். இவரைப் போலவே இவரது தங்கை மோனலும் திரைத்துறையில் ஆர்வம் காட்டி, நடிகர் விஜய்யின் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் இறுதியாக நடித்த ‘பேசாத கண்ணும் பேசுமே’ திரைப்படம் வெளியாகும் சமயத்தில் அவரது மர்ம மரணம் குறித்த செய்திகள் இணையத்தில் தீ போல பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
மோனல் இறந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவரது மர்ம மரணத்திற்கான உண்மையான காரணத்தை நடிகை சிம்ரன் சமீபத்தில் உடைத்துள்ளார். பிரபல நடன இயக்குநரான கலா மாஸ்டரின் தம்பி பிரசன்னா தான் மோனலின் இந்த முடிவுக்குக் காரணம் என்று சிம்ரன் கூறியுள்ளார். மோனலும் பிரசன்னாவும் பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களது காதலுக்கு கலா மாஸ்டரின் வீட்டில் சம்மதம் தெரிவிக்க மறுத்ததால், கடும் மனமுடைவுக்கு ஆளான மோனல், இரண்டே நாட்களில் தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் துரதிர்ஷ்டவசமான முடிவை எடுத்ததாக சிம்ரன் தெரிவித்துள்ளார்.
