மது அரக்கனின் பிடியில் மனிதநேயம் மரணித்துப் போன அதிர்ச்சியூட்டும் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பெற்ற மகளென்றும் பாராமல், குடிபோதையில் வெறிபிடித்த தந்தை ஒருவர் தனது நான்கு வயதுக் குழந்தையைத் தூக்கி சாலையில் வீசி எறிந்து, இரக்கமின்றித் தாக்கியுள்ளார். காண்போரைக் கண் கலங்க வைக்கும் இந்த முழுச் சம்பவமும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/sirajnoorani/status/2075526382218826067/video/1
இக்கோரத் தாக்குதலால் தோள்பட்டையில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள அந்தக் குழந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளியைக் கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மதுவின் போதை மனிதனை மிருகமாக்கும்போது, அதற்கு முதலாவதாகப் பலியாவது இதுபோன்ற அப்பாவி உயிர்கள்தான் என்பதுதான் இதில் வேதனையான உண்மை.
