“வேலை முடிந்து வீடு திரும்பிய கணவன்… உள்ளே மனைவிக்கு நேர்ந்த கதி…! உ.பியில் அரங்கேறிய கொடூரம்…!”

Spread the love

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள நக்லா பூரா கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், நபர் ஒருவரால் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணைக் கொலை செய்த பிறகு, சம்பந்தப்பட்ட அந்த நபரும் அதே அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் நடந்த அன்று மாலையில், பெண்ணின் கணவரான விபின் குமார் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. அவர் நீண்ட நேரமாக பலமுறை கதவைத் தட்டியும் உள்ளே இருந்து எவ்வித பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், கதவை உடைத்துப் பார்த்தபோதுதான் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

வீட்டிற்குள் தனது மனைவி கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும், மற்றொரு நபர் தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு விபின் குமார் அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் யார், கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

“அந்த ராத்திரி நடந்தது என்ன?”…. எடப்பாடி போட்ட கண்டிஷன்… அலறிய விஜய்.. அதிமுக-வை சின்னாபின்னமாக்கும் தவெக?…. அப்பாவு உடைத்த ரகசியம்..!

தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத வகையில் புதிய திருப்பங்களையும், பரபரப்பான விவாதங்களையும் சந்தித்து வருகிறது. சமீபத்திய தேர்தல்…

5 minutes ago

ஒரே ஒரு ஊசி… வயிற்றில் 8 மாத குழந்தையுடன் துடிதுடித்த கர்ப்பிணி பெண்… மருத்துவமனையை அலறவிட்ட கணவனின் பகீர் குற்றச்சாட்டு…!

நவி மும்பை ஐரோலியில் உள்ள ரஜமாதா ஜிஜாவ் மாநகராட்சி மருத்துவமனையில், தவறான ஊசி செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் புகாரில் 8 மாத…

8 minutes ago

“சி.வி.சண்முகத்தின் உயிருக்கு ஆபத்து?”…. உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு… சென்னை ஹைகோர்ட் போட்ட கெடுபிடி உத்தரவு….!

முன்னாள் அமைச்சரும், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகத்திற்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம்…

17 minutes ago

“விஜய்க்கு நோ.. இபிஎஸ்க்கு டாட்டா… யாரும் எதிர்பார்க்காத ‘அந்த’ தேசியக் கட்சிக்கு தாவும் எஸ்.பி.வேலுமணி?… அதிமுகவிற்கு அடுத்த மரண அடி…!

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 50 ஆண்டுகால திமுக-அதிமுக…

22 minutes ago

BIG NEWS: முன்ஜாமின் தள்ளுபடி… அடுத்த சில நிமிடங்களில் தூக்கிய போலீஸ்…. அனிதா ராதாகிருஷ்ணன் கைது….!

முன்னாள் திமுக அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் போலீஸாரால்…

24 minutes ago

விஜய்க்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ‘ஷாக்’.. தமிழக இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்… தவெக கணக்கை தலைகீழாக மாற்றிய அந்த ஒரு முடிவு….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பாரம்பரியமிக்க திமுக, அதிமுக ஆகிய இருபெரும்…

31 minutes ago