பெற்றோர்களே உஷார்…! 15 வயது வரை சிறுவர்களுக்கு நோ சோசியல் மீடியா… UAE போட்ட புது ரூல்ஸ்.. மீறினால் அக்கவுண்ட் க்ளோஸ்…!!

Spread the love

நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ள சமூக ஊடகங்கள், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் அடிமையாக்கியுள்ளன. குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்காகக் குழந்தைகளின் கைகளுக்குச் சென்ற ஸ்மார்ட்போன்கள், தற்போது அவர்களின் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. சிறுவர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், கடந்த 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து, மலேசியா, பிரேசில், இந்தோனேசியா போன்ற பல்வேறு நாடுகளும் சமூக வலைதளப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தப் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த வரிசையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து, 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளச் செயலிகளைப் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதித்துள்ளது. இந்த அதிரடித் தீர்மானத்தின்படி, 15 வயதுக்குக் கீழ் உள்ளவர்களின் சமூக வலைதளக் கணக்குகளைத் தீவிரமாகக் கண்காணித்து, அவற்றை உடனடியாக முடக்குவதற்கும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரபு நாடுகளிலேயே இத்தகைய கடுமையான தடையை அமல்படுத்தும் முதல் நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது.

இந்த உத்தரவின் கீழ், 15 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ள அதே வேளையில், 15 முதல் 16 வயதுடைய பதின்ம வயதினருக்குச் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் போது, வயதுக்கு ஏற்ற கட்டுப்பாடுகள், முகம் தெரியாத புதிய நபர்களுடன் தொடர்பு கொள்வதைத் தடுத்தல், ஸ்கிரீன் டைம் மேலாண்மைக் கருவிகள் மற்றும் பெற்றோரின் நேரடி மேற்பார்வை போன்ற மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை முறைப்படி பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Swetha

Recent Posts

“இது நியாயமே இல்லை”… அத்துமீறிய விமான நிறுவன ஊழியர்… தோனிக்கு நேர்ந்த அநீதி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோவின் பின்னணி…!

மும்பை விமான நிலையத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் அவரது குடும்பத்தினர், விமான நிறுவன…

2 minutes ago

“விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல் போயாச்சு.. அடுத்து இவரா?”…. EPS-க்கு காத்திருந்த அடுத்த ஷாக்…. மாவட்ட நிர்வாகிகளை கூட்டி எடப்பாடி போட்ட அதிரடி உத்தரவு…!

அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைந்து வரும் நிலையில், அக்கட்சியின்…

3 minutes ago

“தயவுசெய்து உள்ளே விடுங்க…” விம்பிள்டன் மேடையில் அழுத உலக நம்பர் 1 வீராங்கனை… டென்னிஸ் அரங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்… மனதை உலுக்கும் வைரல் வீடியோ…!

விம்பிள்டன் 2026 டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் மெக்கார்ட்னி கெஸ்லரை வீழ்த்தி வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உலகின்…

41 minutes ago

ப்ளீஸ் என்ன விட்ருங்க… “திருமணமான பெண்ணை நிர்வாணப்படுத்தி… செருப்பு மாலை அணிய வைத்து” உறவினர்கள் செய்த உச்சகட்ட கொடூரம்…!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள ஜர்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

52 minutes ago