நெஞ்சில் மிதித்து, கண்ட இடத்தில் தொட்டு… கரூர் பிரச்சார கூட்டத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்… மா.செ மனைவி பகீர் பேட்டி…!

By Nanthini on புரட்டாதி 30, 2025

Spread the love

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக மூச்சு திணறி உயிரிழந்தனர். இந்த விவகம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கரூர் பரப்புரையை காணச் சென்ற போது விஜய் வந்ததும் திடிரென்று ஏற்பட்ட நெரிசலால் தான் அருகில் உள்ள குழியில் விழுப்பதாக கைதான மாவட்ட செயலாளர் மதியழகன் மனைவி ராணி கூறியுள்ளார். அப்போது சிலர் குடித்துவிட்டு தனது நெஞ்சில் மிதித்ததாகவும், அநாகரிகமாக தன்னை தொட முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது இரண்டு மகன்களின் உதவியுடன் எழுந்து அங்கிருந்து ஓடி வந்ததாகவும் அவர் பேட்டியில் கூறியுள்ளார்.