நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தது போல…. விஜய்யை ஏன் கைது செய்யக்கூடாது..?” போலீசில் பரபரப்பு புகார்..!!!

By Soundarya on புரட்டாதி 29, 2025

Spread the love

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் பிரச்சாரம் நடத்தினார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்த விஜய் உயிரிழந்த குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார். தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக கூறினார். இந்தத் துயர சம்பவம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்துள்ளது சொல்லலாம்

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக TVK தலைவர் விஜய்யை கைது செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், “புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ரசிகை ஒருவர் உயிரிழந்ததால், அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார். அதேபோல 41 பேர் உயிரிழந்த கரூர் சம்பவத்தில் ஏன் விஜயை கைது செய்யக்கூடாது?” என உங்களின் ஒருவன்’ அமைப்பு சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.