இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வீரர் தான் வருண் சக்கரவர்த்தி. கர்நாடகாவின் பீதாரில் பிறந்த இவர் SRM பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையில் இளங்கலை பட்டம் பெற்றவர். 2021 ஆம் ஆண்டில் தன்னுடைய 25 வயதில் வருண் சக்கரவர்த்தி தன்னுடைய வேலையை விட்டுவிட்டு தொழில் முறையாக கிரிக்கெட்டை தொடர முடிவு செய்தார். இவர் ஒரு வலது கை பேட்ஸ்மேன். அபாரமாக வந்து வீசக்கூடிய திறமை கொண்டவர். இவர் 2018 ஆம் ஆண்டு விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு அணிக்காக லிஸ்ட் ஏ பிரிவில் அறிமுகமானார்.
தற்போது சுழல் பந்துவீச்சாளராக 106 டி20 போட்டிகள், 18 டி20 மற்றும் 2 ஒரு நாள் போட்டிகள் உட்பட 152 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். சமீபத்தில் ஐசிசி சாம்பியன் டிராபியில் அபாரமாக விளையாடியிருந்தார். தொடர்ந்து பல சாதனைகளை கிரிக்கெட்டில் செய்து கொண்டிருக்கும் வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட் அனைவர் மத்தியிலும் பிரபலமடைவதற்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அதில், கிரிக்கெட் பிரபலம் அடைந்ததற்கு முக்கிய காரணம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது கிரிக்கெட் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்.
அதாவது ஒவ்வொரு ஓவருக்கும் இரண்டு நிமிட இடைவேளை இருக்கும். எனவே இடைவேளையில் விளம்பரம் செய்ய விரும்புவோருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஓவரையும் எல்லா இடங்களிலும் விளம்பர படுத்தலாம். ஆனால் மற்ற விளையாட்டுகளில் நீங்கள் 30 நிமிடங்கள் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டி இருக்கும். மற்ற போட்டிகளில் விளம்பரம் செய்வதற்கு அதிக நேரம் இருக்காது. இயற்கையாகவே கிரிக்கெட்டுக்கு அதிக விளம்பரங்கள் உண்டு. கிரிக்கெட் வளர தொடங்கியது. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருமே கிரிக்கெட்டை விரும்புகிறார்கள் என வருண் சக்கரவர்த்தி பேசியுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…