கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரித்து வருகின்றது. பல்வேறு தரப்பினரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என விஜய்க்கு சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் விஜய் நேற்று சென்னையிலிருந்து தனி விமான மூலமாக டெல்லி சென்றடைந்தார். அங்கு சிபிஐ தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜரானார்.
அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் டெல்லிக்குச் சென்று இருந்தனர். தொடர்ந்து விஜய் இடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் முகாமிட்டுள்ள விஜய் சிபிஐ அதிகாரிகளிடம் கூறிய பல்வேறு முக்கியமான தகவல்கள் கசிந்துள்ளன. 4 பேர் கொண்ட CBI அதிகாரிகளிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த விஜய், தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு தகவல்களையும் கூறியதாக தெரிகிறது. குறிப்பாக காவல்துறையின் அழுத்தத்தின் பேரிலேயே கரூரிலிருந்து தான் சென்னை கிளம்பியதாகவும் கூட்ட நெரிசலுக்கு அரசுதான் முழு காரணம் என அழுத்தமாக கூறியுள்ளாராம்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…
அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…