ஆதார் அட்டையுடன் உங்களது தற்போதைய கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் எளிதாகச் சரிபார்க்கலாம். இதற்காகப் பயனர்கள் ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான myaadhaar.uidai.gov.in பக்கத்திற்குச் சென்று, அதில் உள்ள ‘Verify Email/Mobile’ என்ற வசதியைப் பயன்படுத்த வேண்டும். அங்கு உங்கள் ஆதார் எண்ணையும், நீங்கள் சரிபார்க்க விரும்பும் மொபைல் எண்ணையும் உள்ளிட்டு, திரையில் தோன்றும் குறியீட்டைப் பதிவிட்டால், உங்கள் விவரங்கள் ஏற்கனவே பதிவாகியுள்ளனவா என்பது குறித்த தகவல் உடனடியாகத் தெரிந்துவிடும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணை மாற்ற விரும்பினால், அதை இணையம் வாயிலாகச் செய்ய முடியாது; பாதுகாப்பு காரணங்களுக்காக நேரடியாக ஆதார் சேவை மையத்திற்குச் செல்வது அவசியமாகும். உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள ஆதார் மையங்களை இதே இணையதளத்தின் மூலம் மாநிலம் அல்லது அஞ்சல் குறியீட்டு எண்ணைப் பயன்படுத்தி எளிதில் கண்டறியலாம். இவற்றுடன் முகவரி மாற்றம், பயோமெட்ரிக் லாக் மற்றும் பிவிசி கார்டு விண்ணப்பித்தல் போன்ற இதர சேவைகளையும் ஆன்லைன் மூலமாகவே மக்கள் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…