நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மே 16 அன்று சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், தனது விவாகரத்து விவகாரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்கள் குறித்துப் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தனது மனைவி ஆர்த்தி விவாகரத்து கொடுக்கும் வரை தாம் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்ட அவர், இந்தச் சூழலில் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல்களையும், “பிளாக் மேஜிக்” (பில்லி சூனியம்) போன்ற செயல்களால் தான் பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்ததாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மேலும், பாடகி கெனிசாவைத் திட்டமிட்டுத் தன்னிடம் அனுப்பியவர்களைச் சும்மா விடப்போவதில்லை என்றும் அவர் ஆவேசமாக எச்சரித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில், தன் குடும்ப வாழ்க்கையைக் கெடுத்ததாக “மூன்று எழுத்து கொண்ட இட்லி நடிகை” ஒருவரைப் பெயர் குறிப்பிடாமல் ரவி மோகன் கடுமையாகக் குற்றம் சாட்டினார். அந்த நடிகை தன்னைத் தாக்குவதாகவும், முந்தைய தலைமுறை ஹீரோக்கள் மூவர் அந்த நடிகையைத் தங்கள் ‘குடும்பத்தையே கெடுக்க வந்தவள்’ என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெண்ணியவாதி (Feminist) என்று சொல்லிக்கொண்டு, அந்த நடிகை தனது வாழ்க்கையையும் சீரழித்து வருவதாக ரவி மோகன் உரக்கக் குரல் எழுப்பினார்.
ரவி மோகன் குறிப்பிட்ட அந்த “மூன்று எழுத்து இட்லி நடிகை” யார் என்பது குறித்து இணையத்தில் தற்போது பெரும் விவாதமும் தேடலும் எழுந்துள்ளது. ரவியின் மனைவி ஆர்த்திக்கு மிகவும் நெருக்கமானவராகவும், சமூக வலைத்தளங்களில் அவருக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருபவருமான நடிகை குஷ்பூ தான் அது என்று நெட்டிசன்கள் பலரும் சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஆர்த்தி – ரவி மோகன் திருமணத்திற்கு ஆரம்பத்திலிருந்தே குஷ்பூ முக்கியக் காரணமாக இருந்த பின்னணியில், இந்த ‘இட்லி நடிகை’ என்ற மறைமுகக் குறிப்பு அவரையே குறிப்பதாக இணையத்தில் செய்திகள் வேகமாக வைரலாகி வருகின்றன.
