“அடச்சீ…” பொது இடத்துல இப்படியா?… வழக்கறிஞர்கள் செய்ற காரிய இது… அனுமதியின்றி கேமராவை நீட்டிய டிக்டாக் பிரபலம்… சென்ட்ரல் பார்க்கில் அதிர்ச்சி சம்பவம்… நியூயார்க்கை உலுக்கும் ரகசிய முத்தம்…!

By Visaka on ஆடி 26, 2026

Spread the love

நியூயார்க் நகரின் சென்ட்ரல் பார்க்கில் உள்ள பூங்காவில் நன்கு உடை அணிந்த தம்பதியினர் அமர்ந்து முத்தமிட்டுக் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜே குவாபோ’ என்ற டிக்டாக் கலைஞர், அந்த தம்பதியினரை இடையூறு செய்து “அறைக்கு சென்று முத்தமிடுங்கள், அருகில் குழந்தைகள் உள்ளனர்” என்று சத்தமாகக் கூறியதுடன், அவர்களின் அனுமதியின்றி வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இதனால் அந்த தம்பதியினர் அதிர்ச்சியடைந்து கேமராவைத் தவிர்க்க முயன்றனர். கடந்த ஆண்டு கோல்ட் பிளே இசை நிகழ்ச்சியில் நடந்த சர்ச்சையை ஒப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் இது குறித்து பல்வேறு வதந்திகளைப் பரப்பி வந்தாலும், அவர்களின் உண்மையான அடையாளம் மற்றும் உறவுமுறை குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

பொதுவெளியில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளை அனுமதியின்றி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது சரியா என்ற கேள்வி தற்போது இணையத்தில் எழுந்துள்ளது. இந்த சம்பவத்திற்குப் பலரும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருவதுடன், இது அந்நியர்களின் தனிப்பட்ட உரிமையில் அத்துமீறும் செயல் என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வைரல் ஆகும் நோக்கத்திற்காகப் பொதுமக்களை குறிவைத்து வீடியோ வெளியிடும் இத்தகைய செயல்கள், பொது இடங்களில் தனிநபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதங்களை மீண்டும் ஒருமுறை தீவிரமடையச் செய்துள்ளன.