“தினமும் இப்படித்தான் நடக்கு” என்னால முடியல…! மனைவியின் கொடூர முகத்தை காட்டிய ரகசிய கேமரா.. இணையத்தில் வைரலாகும் கணவனின் கண்ணீர் வீடியோ…!!

By Soundarya on மாசி 2, 2026

Spread the love
தன் மனைவியின் தொடர்ச்சியான உடல் மற்றும் மன ரீதியான சித்ரவதைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட, கணவர் ஒருவர் வீட்டில் ரகசிய கேமரா பொருத்திய சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த கேமராவில் பதிவான காட்சிகள், கணவர் மீது மனைவி நடத்தும் மிக மோசமான வன்முறைகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளன.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு ஆதரவாகப் பொதுமக்கள் திரண்டுள்ளனர். மனைவியால் கணவன்மார்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்குப் போதிய சட்டப் பாதுகாப்பு கிடைப்பதில்லை என்ற ஆதங்கத்தையும் பலர் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கணவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.