அதிர்ச்சி… உதயநிதி கைது… பின்னணியில் இருக்கும் ரகசியம்?… பரபரக்கும் தமிழக அரசியல்…!

By Swetha on ஆவணி 5, 2026

Spread the love

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதன் பின்னணியில், தவெக தலைவர் விஜய்யுடனான அரசியல் மற்றும் தனிப்பட்ட முரண்பாடுகள் மட்டுமின்றி, காவல்துறை டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலின் நீண்டகால கோபமும் முக்கியக் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்தபோது சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால், அச்சம்பவத்தைத் தொடர்ந்து முக்கியத்துவம் இல்லாத வேறு துறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் திமுக ஆட்சியில் அவர் டிஜிபி பதவிக்கு உயர்வு பெறுவதைத் தடுக்க உதயநிதி ஸ்டாலின் தீவிரமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்த அதிகாரப் போட்டி இருவருக்குமிடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியதாகக் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போதைய சூழலில், தனக்கு ஏற்பட்ட அந்தப் பதவி பின்னடைவுக்கும் புறக்கணிப்புக்கும் பழிவாங்கும் நோக்கத்துடனேயே, மகேஷ்குமார் அகர்வால் இந்த தீவிர நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்று திமுக வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. விஜய்யின் அரசியல் ரீதியான நெருக்கடி ஒருபுறமிருக்க, அதிகார வர்க்கத்தில் உதயநிதிக்கு எதிராக இருந்த இந்த தனிப்பட்ட அதிருப்தியும் இணைந்ததே இந்த கைது நடவடிக்கை விரைவுபடுத்தப்பட முக்கியக் காரணம் என ஆளுங்கட்சித் தரப்பில் பேசப்படுகிறது.