“முடிவுக்கு வருகிறதா சிஎஸ்கே சாம்ராஜ்யம்?… ஆர்சிபியிடம் படுதோல்வி அடைந்த பின் ருதுராஜ் சொன்ன அந்த ஒரு வார்த்தை… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!

By Rajeshwari on சித்திரை 6, 2026

Spread the love

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் தோல்விகளைச் சந்தித்து ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

மேலும் கடினமான இந்த இலக்கை துரத்திய சிஎஸ்கே, 20 ஓவர்கள் முடிவில் 207 ரன்கள் மட்டுமே எடுத்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முன்னதாக ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளிடமும் தோல்வியடைந்திருந்த சென்னை அணிக்கு, இது தொடர்ச்சியான மூன்றாவது தோல்வியாக அமைந்தது.

   

இந்தத் தோல்வி குறித்துப் பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட், தங்களின் இந்த மோசமான நிலைக்கு முழுப் பொறுப்பேற்பதாகத் தெரிவித்தார். குறிப்பாக, தொடக்க ஆட்டக்காரராக தான் முன்னதாகவே ஆட்டமிழந்தது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாக அவர் ஒப்புக்கொண்டார்.

   

இதனால் விராட் கோலிக்கு கொடுக்கப்பட்ட கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டது ஆட்டத்தின் போக்கை மாற்றிய முக்கியத் தருணம் என்றும், டிம் டேவிட் அதிரடியாக விளையாடியது தங்களுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சர்பராஸ் கான் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் போராடிய போதிலும், தொடக்கத்தில் ஏற்பட்ட விக்கெட் இழப்புகளே தோல்விக்குக் காரணம் என அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.