முதல் கணவரின் இன்சூரன்ஸ் பணம் ரூ.11 லட்சம்….! கண்ணை மறைத்த ஆசை….! மொத்த குடும்பத்தையும் எரித்த 2-வது கணவன்…!!

By Devi Ramu on மார்கழி 24, 2025

Spread the love

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், காப்பீட்டுப் பணத்திற்காகத் தனது குடும்பத்தையே பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற நபரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்யது அலி பாத்திமா என்பவரின் முதல் கணவர் விபத்தில் இறந்ததற்காகக் கிடைத்த ரூ.11 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தை, அவரது இரண்டாவது கணவரான அக்பர் அலி கேட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

அக்பர் அலி, ஏற்கனவே சிறை சென்று ஜாமீனில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பணத்தாசை காரணமாக அக்பர் அலி தனது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியின் மாமியார் என நான்கு பேர் மீதும் நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார்.

   

இந்தக் கொடூர சம்பவத்தில் சிக்கந்தர் பீவி என்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூன்று பேரும் 90 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

   

இதில் விபரீதம் என்னவென்றால், தீ வைத்தபோது அக்பர் அலி மீதும் நெருப்பு பற்றியதால், அவர் ஆடையின்றி தீக்காயங்களுடன் ஓடிச் சென்று காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த கொடூரம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.