தேனீக்களின் விஷம் மார்பகப் புற்றுநோய்க்கு சிறந்த மருந்து… “1 மணி நேரத்தில் அழித்துவிடும்” ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு…!!

By Soundarya on மார்கழி 24, 2025

Spread the love

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் புதிய ஆய்வில், தேனீக்களின் விஷம் மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான ஒரு சிறந்த மருந்தாகச் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள மெலிட்டின் என்ற வேதிப்பொருள், ஆரோக்கியமான செல்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாமல், புற்றுநோய் செல்களை மிகக் குறுகிய காலத்தில் அழிக்கும் ஆற்றல் கொண்டது.

குறிப்பாக, சிகிச்சைக்குக் கட்டுப்படாத கடினமான புற்றுநோய் செல்களைக்கூட இது அழிப்பதால், மருத்துவத்துறையில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. தேனீ விஷத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மெலிட்டின் ஆரோக்யமான செல்களை சிதைக்காமல் வெறும் 60 நிமிடங்களுக்குள் மார்பகப் புற்றுநோய் செல்களை முழுமையாக அழிக்கும் திறன் கொண்டது. மேலும், இது புற்றுநோய் செல்கள் மீண்டும் உருவாவதைத் தடுப்பதுடன், அவை உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதையும் (Metastasis) திறம்படக் கட்டுப்படுத்துகிறது. கடினமான புற்றுநோய் வகைகளுக்கும் இது ஒரு சிறந்த தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.