பகுதிநேர ஆசிரியர்களுக்குப் பொங்கல் பரிசு…! சம்பளம் ரூ.15,000-ஆக உயர்வு…. அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி…!!

By Devi Ramu on தை 14, 2026

Spread the love

தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களின் நீண்ட காலப் போராட்டத்திற்குப் பலன் கிடைக்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஆசிரியர்களுக்கு 2,500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 12,500 ரூபாயாக இருந்த அவர்களின் மாதச் சம்பளம் இனி 15,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

மேலும், கடந்த 12 ஆண்டுகளாக மே மாதத்தில் ஊதியம் வழங்கப்படாத குறையைத் தீர்க்கும் விதமாக, இனி வருடத்தில் 12 மாதங்களும் சம்பளம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, கோடை விடுமுறை காலமான மே மாதத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 10,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். பொங்கல் சமயத்தில் கிடைத்துள்ள இந்த ஊதிய உயர்வு மற்றும் 12 மாதச் சம்பள அறிவிப்பு, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.