வயதான பெற்றோரை கவனிக்காமல் அலட்சியப்படுத்தும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 10% முதல் 15% வரை பிடித்தம் செய்யப்பட்டு, அந்தத் தொகை நேரடியாக பெற்றோரின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும் என தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்காக மாநில சட்டப்பேரவையில் விரைவில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா 2026-ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்களது பிள்ளைகள் அரசு வேலையில் சேர்ந்த பிறகு கைவிடப்படுவதைத் தடுக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் இந்த மனிதாபிமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் புகார் அளித்தால், அது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்ட பின்னரே ஊதிய பிடித்தம் செய்யப்படும்.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…