“இன்னும் சினிமா படத்திலேயே இருக்கீங்க…” CM விஜய் ‘ஓடு ஓடு’ சைகைக்கு… செம நோஸ்கட் கொடுத்த சிவசங்கர்…!

Spread the love

கரூரில் தவெக சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பை விமர்சித்த சிவசங்கர், அன்று பிரச்சாரத்திற்கு வருவதாகக் கூறிவிட்டு நடிகர் விஜய் சரியான நேரத்திற்கு வராமல் தாமதம் செய்ததால்தான் 41 பேர் உயிரிழந்தனர் என்ற கசப்பான உண்மையை இந்த நினைவுச்சின்னம் மக்களுக்குக் காலத்திற்கும் நினைவூட்டும் என்றார். மேலும், அன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கூப்பிட்டபோது அவர்களுக்குப் பதிலளிக்காமல் விஜய் வேகமாகத் திரும்பி நடந்து சென்றாரே, அந்த “முதுகு” தான் தமிழக மக்களின் மனதில் தற்போதைய உண்மையான நினைவுச்சின்னமாக இருக்கிறது என்றும் அவர் சாடினார்.

விஜய் இன்னும் திரைப்படங்களை விட்டு வெளியே வரவில்லை என்று குறிப்பிட்ட சிவசங்கர், மேடையில் விஜய் ‘ஓடு ஓடு’ என சைகை காட்டிப் பேசியதைச் சுட்டிக்காட்டினார். கரூர் துயரச் சம்பவம் நடந்த அன்று, அங்கு பாதிப்பு ஏற்பட்டவுடன் மக்களைத் தவிக்கவிட்டுவிட்டு கரூரிலிருந்து சென்னைக்கு வேகமாக ஓடி வந்தது யார் என்பது இந்த நாட்டிற்கே தெரியும் என்றும், அந்த ‘ஓடு ஓடு’ என்ற வார்த்தைக்கு முதலமைச்சர் விஜய்தான் மிகச் சிறந்த உதாரணம் என்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதிலை மேற்கோள் காட்டி அவர் விமர்சித்தார்.

அன்றைய முதலமைச்சர் ஸ்டாலினும், உள்ளூர் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியும் ஏன் சம்பவ இடத்திற்கு வேகமாகச் சென்றார்கள் என்று விஜய் கேள்வி எழுப்பியதற்குப் பதிலளித்த அவர், தனது ஆட்சியில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும்போது பொறுப்புணர்வோடு ஓடிப் போய்ப் பார்ப்பதுதான் ஒரு உண்மையான ஆட்சியாளரின் மரபு என்று கூறினார். மேலும், தற்போதைய அரசுத் திட்டங்கள் மற்றும் உதவிகளைத் தனது சொந்தக் கட்சியின் ஆட்சி போல நினைத்து விஜய் செயல்படுவதாகவும், சினிமா நடிகர்களைப் பார்க்கக் கூடும் கூட்டங்களில் அசம்பாவிதங்கள் நடந்தால் அரசு வேலை கொடுப்பது போன்ற அறிவிப்புகள் தவறான அரசியல் முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்றும் சிவசங்கர் எச்சரித்துள்ளார்.

Swetha

Recent Posts

என் குழந்தைகள் அவரை ‘அப்பா’னு தான் கூப்பிட்டாங்க…. கருப்பு முருகானந்தம் மீது கதறும் பாஜக பெண் நிர்வாகி…. டெல்லி மேலிடத்திற்குச் சென்ற ரகசிய கடிதம்….!

தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் துன்புறுத்தல், ஏமாற்றுதல் மற்றும்…

3 minutes ago

“காங்கிரஸுடன் லடாய்… தவெக MLA-க்கள் கடுப்பு”…. CTR நிர்மல் குமாருக்கு செக் வைக்கும் மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்….!

மதுரையைச் சேர்ந்த தமிழக அமைச்சர்களான CTR நிர்மல் குமார், விஸ்வநாதன் இடையே உள்கட்சி பூசல் மற்றும் பனிப்போர் நிலவி வருவதாக…

14 minutes ago

“திமுக தயவு இல்லனா நீங்க எம்.எல்.ஏ-வே ஆகியிருக்க முடியாது”…. வன்னியரசை வைத்தே திருமாவை அலறவிட்ட ராஜகம்பீரன்…. அரசியலில் அடுத்த பரபரப்பு…!

\ தமிழ்நாட்டு அரசியலில் தற்போதைய கூட்டணி மாற்றங்களும், தலைவர்களின் பரஸ்பர விமர்சனங்களும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இது குறித்து பிரபல…

25 minutes ago

நேருவின் சீக்ரெட்டை உடைத்த துரை வைகோ…. “உதயநிதி பற்றி என்ன சொன்னீங்க ஞாபகம் இருக்கா?”…. அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியலில் நீண்டகாலமாக திமுக கூட்டணியில் நீடித்துவந்த மதிமுக, தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்க்கு ஆதரவு…

42 minutes ago

யூடியூபர் வைஷ்ணவி கொலை வழக்கு…. மனைவியைக் கொன்ற கணவனுக்கு நேர்ந்த கொடூரம்…. நடுரோட்டில் நடந்த பழிக்குப் பழி….!

தெலுங்கானா மாநிலம் கோருட்லாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி, ஹரி பாபு என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து…

1 மணத்தியாலம் ago

“6 மாதம் கூட தாங்காது வண்டி”…. எம்பிக்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.25 கோடி ஆஃபர்?…. தவெக குதிரை பேர விவகாரத்தில் வெளிவந்த பரபரப்பு உண்மை…..!

அரசியல் விமர்சகரும் மூத்த எழுத்தாளருமான ராஜகம்பீரன், 'News focus tamil' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின்…

1 மணத்தியாலம் ago