கடன் வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்..! ரெப்போ வட்டி விகிதம் உயராது… RBI வெளியிட்ட ஹேப்பி நியூஸ்..!!

By Soundarya on சித்திரை 8, 2026

Spread the love

ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா, குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (Repo Rate) எந்த மாற்றமும் இல்லை என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். இதன்படி, ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து 5.25% என்ற நிலையிலேயே நீடிக்கும். புதிய நிதியாண்டு தொடங்கிய நிலையில், வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் நிலவிய சூழலில், இந்த அறிவிப்பு கடன் வாங்கியவர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாததால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான மாதத் தவணையில் (EMI) தற்போதைக்கு உயர்வு இருக்காது. ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கிய புதிய நிதியாண்டில் வட்டி உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முடிவு சாமானிய மக்களுக்கு நிம்மதியைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.