விஜய்க்கு சிக்கல்… ஜனநாயகன் பொங்கலுக்கு வெளியாவது கேள்விக்குறிதான்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

By Soundarya on தை 3, 2026

Spread the love
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி மற்றும் பாபி தியோல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படத்தின் விறுவிறுப்பான டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது.
திரைப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து தணிக்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில், சில காட்சிகளை நீக்க தணிக்கைக்குழு அறிவுறுத்தியுள்ளதால் சான்றிதழ் பெறுவதில் தற்காலிகச் சிக்கல் நீடிக்கிறது. இதனால் படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் எனத் தகவல்கள் வெளியானாலும், படக்குழுவினர் தணிக்கை மாற்றங்களைச் சரிசெய்து படத்தை திட்டமிட்டபடி வெளியிடத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் நாளை முதல் திரையரங்கு முன்பதிவுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிகாரப்பூர்வ தகவல்களை த.வெ.க மற்றும் படக்குழுவின் சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.