தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா காலத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பு சரண் (Earned Leave Surrender) செய்து பணமாகப் பெறும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 2025-26 நிதிநிலை அறிக்கையில் இந்தச் சலுகை 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று 2025 அக்டோபர் 1 முதல் முன்கூட்டியே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.சுமார் 9 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதன் மூலம் பலனடைவார்கள். ஊழியர்கள் ஆண்டுக்கு 15 நாட்கள் வரை தங்களது ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து அதற்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
