CINEMA
விஜய்யுடன் போட்டியா..? விடாப்பிடியாக நிற்கும் தலைவர்.. வேட்டையனால் தள்ளிப் போகிறதா கங்குவா..?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. அடுத்ததாக இயக்கும் வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அக்டோபர் 10-ஆம் தேதி தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறுகிறார். அதே தேதியில் தான் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரே நாளில் இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் எந்த படம் ஹிட் ஆகும் என்பது தெரியாது.
ஞானவேல் ராஜா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. அதே நேரம் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படமும் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். வேட்டையன் படத்தின் VFX வேலைகள் இன்னும் முடிவடைய வேண்டி இருக்கிறது. இதனால் படத்தின் ரிலீஸ் கொஞ்ச நாட்கள் தள்ளி வைக்கலாம் என ரஜினிகாந்த்திடம் இயக்குனர் பேசியுள்ளார். அதற்கு தயாரிப்பு நிறுவனமும் ஓகே சொல்லியுள்ளது.
ஆனால் ரஜினிகாந்த் கண்டிப்பாக அக்டோபர் பத்தாம் தேதி தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என திட்டவட்டமாக கூறிவிட்டாராம். இயக்குனர் சிறுத்தை சிவா ரஜினிகாந்த் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதற்கு ரஜினிகாந்த் நீங்களும் அதே தேதியிலேயே படத்தை ரிலீஸ் செய்யுங்கள். ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் செய்தாலும் பிரச்சனை வராது. இரண்டு படங்களுமே வெற்றி அடைய வாய்ப்பு அதிகம் இருக்கிறது என கூறியுள்ளார்.
ஆனாலும் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்துடன் மோத வேண்டாம் என சிறுத்தை சிவா நினைக்கிறாராம். இதனால் கங்குவா திரைப்படம் தாமதமாக தான் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி தளபதி விஜயின் கோட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கு அடுத்த மாதமே வேட்டையன் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என ரஜினிகாந்த் நினைக்கிறார். கோட் திரைப்படத்தின் வசூலை நெருங்க வேண்டும். அல்லது முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் ரஜினிகாந்த் செயல்படுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.