CINEMA
வாழை படத்துல சிவனைந்த பெருமாள் என்ற பெயர் இவரோடதா…? மாரி செல்வராஜ் கூறிய விளக்கம்…
மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் இந்த சிறுகதையின் ஆசிரியர் மாரி செல்வராஜ். இது மட்டுமில்லாமல் சில காலங்கள் பத்திரிக்கையில் பணிபுரிந்த மாரி செல்வராஜ் பின்னர் இயக்குனர் ராமனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து பணிபுரிந்தார். பின்னர் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் மாரி செல்வராஜ்.
அடுத்ததாக கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கி தனது படங்கள் மூலம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் மாரி செல்வராஜ். இவரின் கதைகள் எல்லாமே ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் விதமாகவே இருக்கும். தற்போது மாரி செல்வராஜ் எழுதி இயக்கி தயாரித்த வாழை திரைப்படம் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
வாழை திரைப்படத்தை தனது சொந்த வாழ்க்கையில் சிறுவயதில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுத்திருப்பதாக மாரி செல்வராஜ் கூறியிருந்தார். ஒரு வாழை விவசாயம் செய்து அந்த வாழை சந்தைக்கு வந்து விற்பனைக்கு வருவதற்குள் எத்தனை மக்கள் அதன் பின்னால் கஷ்டப்படுகிறார்கள் என்பதை இந்த படம் எடுத்துரைந்தது.
மேலும் இந்த படத்தின் இறுதியில் வந்த கிளைமாக்ஸ் காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சை கலங்கடிக்கும் வகையிலே இருந்தது. இந்த வருடத்திற்கான சிறந்த படம் வாழை என்று அனைவரும் புகழ்ந்து பேசி இருந்தனர். இந்த திரைப்படத்தில் இரண்டு சிறுவர்கள் நடித்திருப்பர். தங்களது நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தி இருப்பர். இது சம்பந்தமாக சமீபத்தில் மாரி செல்வராஜ் ஒரு நேர்காணலில் கூறியிருப்பார்.
அவர் கூறியது என்னவென்றால் வாழை திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வரும் சிறுவனின் பெயர் சிவனைந்த பெருமாள். இந்த சிவனைந்த பெருமாள் என்ற பெயர் என் அண்ணனோடது தான். என் மனதில் சினிமா கலையை விதைத்தது என் அண்ணன் தான். ஆனால் கடந்த 14 வருடங்களாக என் அண்ணனிடம் நான் பேசுவதில்லை. அதற்கு சில பர்சனல் காரணங்கள் இருக்கிறது. ஆனால் எங்க அண்ணன் மீது எனக்கு அளவு கடந்த பாசம் இருக்கிறது. அவரை பார்க்க வேண்டும் என்று தோன்றினால் அவர் வேலை பார்க்கும் இடத்திற்கு கேட்டிற்கு வெளியே நின்று தலையில் ஹெல்மெட் போட்டு யாரோ போல் நின்று பார்த்துவிட்டு வந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார் மாரி செல்வராஜ்.