உனக்கு ரொம்ப நக்கல் யா… பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு வாங்கிட்டு போன ரெட் கார்டு… வைச்சு பிரதீப் என்ன பண்ணிருக்காரு பாருங்க… 

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்க்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளனர். இதில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில்  ரசிகர்களின் பெரும் ஆதரவை  பெற்ற போட்டியாளர்களில் ஒருவர் தான்  பிரதீப் ஆண்டனி. இந்த சீசன் துவங்கிய முதல் வாரத்தில் பிரதீப் ஆண்டனி பல விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் நிகழ்ச்சி செல்ல செல்ல அவருக்கு ஆதரவு கிடைத்தது. அவர் எதார்த்தமாக தான் இருக்கின்றார் என ரசிகர்கள் கூறி வந்தனர்.

   

இந்நிலையில் இந்த சீசனில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களின் பிரதீப்பிற்கே அதிக ஆதரவு கிடைத்தது. ஒவ்வொருமுறை பிரதீப் நாமினேட் ஆன போது அவருக்கு அதிக வாக்குகளை செலுத்தி பிரதீப்பை ரசிகர்கள் காப்பாற்றி வந்தனர். பிரதீப் முதல் ஆளாக எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுகின்றார் என கமல் அறிவிக்கும் போது அங்கு இருக்கும் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதனை பார்த்த மற்ற போட்டியாளர்கள் பிரதீப்பிற்கு இவ்வளவு சப்போர்ட் இருக்கின்றதா? என அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக பிரதீப் நடந்துகொள்ளும் விதம் ரசிகர்களுக்கு சற்று பிடிக்கவில்லை என்றே கூறலாம். எனினும் அவருக்கு தொடர்ந்து தங்களது ஆதரவையே கொடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பிரதீப் மற்ற ஹவுஸ்மேட்களால்  டார்கெட் செய்யப்பட்டு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் கோபமான அவரது ஆதரவாளர்கள் கமலஹாசனுக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தற்பொழுது பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்கள், பொதுமக்கள், அவருடைய ரசிகர்கள், பிரபலங்கள்  என பலரும் கமலஹாசனின் இந்த முடிவிற்கு எதிராக தங்களது  எதிர்ப்பை தொடர்ந்து இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரதீப் , பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு வாங்கிட்டு போன ரெட் கார்டு வைச்சு பெண்கள் சூழ கொண்டாடிய புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.